சென்னை: எமர்ஜென்சியின் போது ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியவர் கலைஞர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 1967-ல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று அண்ணா முதல்வரானார். இந்திராகாந்தி ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்க கூடாது என டெல்லியில் இருந்து தூது வந்தது. ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சி நிலையை எதிர்த்து ஆட்சியை இழந்தது திமுக என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.