டெக்சாஸ்: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்காக உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டை சோதித்து வருகிறது. இதன் 9வது ராக்கெட் சோதனை டெக்சாசில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதளமான ஸ்டார்பேசில் நடந்தது.
ராக்கெட் ஏவப்பட்ட 30வது நிமிடத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டு இந்திய பெருங்கடலில் விழுந்தது. எரிவாயு கசிவு காரணமாக சோதனை முயற்சி தோல்வி அடைந்ததாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கூறி உள்ளது. இது ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையின் தொடர்ந்து 3வது தோல்வியாகும்.