டெல்லி: எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவை வழங்க உரிமம் பெற்றது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து உரிமம் பெற்றதை அடுத்து விரைவில் இந்தியாவில் ஸ்டார்லிங் சேவையை தொடங்கும். ஏற்கெனவே பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் யுடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ ஆகியவை உரிமங்களை பெற்றுள்ளன. கடந்த மார்ச்சில் செயற்கைக்கோள் வழி இணையதள சேவை வழங்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸுடன் ஏர்டெல் ஒப்பந்தம் செய்தது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவை வழங்க அனுமதி!!
0
previous post