டெல்லி: பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் நாளை இந்தியா வர இருந்த நிலையில் திடீரென பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் எலான் மஸ்க் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.