கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மாமரம், வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராமம் அருகே குடியிருப்பு பகுதியில் நேற்று 3 காட்டு யானைகள் நின்றிருந்தன. இதை கவனிக்காமல் அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி ஜானகி (60), வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றார். அப்போது புதர் பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை, தும்பிக்கையால் தூக்கி வீசி, காலால் மிதித்து, ஜானகியை கொன்றது.