சென்னை: மின்னணு பாகங்களை தயாரிக்க ரூ.1,600 கோடி முதலீட்டில் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. தைவான் நாட்டை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் கடந்த வாரம் முதல்வரை சந்தித்த நிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.