புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மெகபூப் பிராச்சா என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘தேர்தல் ஆணையம் தேர்தலுக்காக பயன்படுத்தும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் முறையில் குளறுபடிகள் இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் தேர்தல் நடத்தும் விதிமுறைகளுக்கு எதிரானதாகும். அதனால் அவற்றை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். ஏனெனில் விரைவில் அரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
மேற்கண்ட மனுஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் மனுதாரர் முன்வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரம் இல்லாதவையாகும். இதுபோன்ற மனுக்கள் சட்ட விதிகளை தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை நீதிமன்றத்தால் விசாரிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.