சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வரும் 16ம் தேதி முதல் ஏற்படும் தலைவர் பதவி காலியிடத்தை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.ஜி.செல்வம் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்புவதற்காக கடந்த 31ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால வரம்பை இன்று முதல் வரும் 16ம் தேதி மாலை 6 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.