ஆவடி: ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (54) பட்டாபிராம் மின்சார அலுவலகத்தில் லைன்மேனாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பட்டாபிராம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த கும்பல் நடைமேடையில் அமர்ந்திருந்த பயணிகளை பிளாஸ்டிக் பைப்பை வைத்துக்கொண்டு மிரட்டும் வகையில் சுற்றி திரிந்தனர். இதை தட்டி கேட்ட பரமசிவத்தை அவர்கள் பைப்பால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (24), பட்டாபிராம் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் (24), மற்றும் 14 வயது சிறுவன் ஆகிய மூவரையும் இதில் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மின்வாரிய அலுவலர் மீது தாக்குதல் சிறுவன் உட்பட 3 பேர் கைது
0