கும்மிடிப்பூண்டி: நரசிங்கபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் – பிரேமா தம்பதியரின் மகள் சமுத்ராவின் முதலாமாண்டு பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு கொடிக்கம்பம் நடும்போது மேலே சென்ற மின்சார வயர் மீது கம்பம் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் (19) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.