சென்னை: தமிழகத்தில் பழைய மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நுகர்வோரின் வசதிக்காகவும் உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மின்மீட்டர்களை மாற்றுமாறு உத்தரவு சுற்றறிக்கை அளித்துள்ளனர். நிறைய மின் மீட்டர்கள் பழுதாகி இருக்கின்றன மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, போன்ற பகுதிகளில் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிதாக போடக்கூடிய மீட்டர்கள் ஸ்மார்ட் மீட்டர்களாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது, ஏனென்றால் இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் தான் தற்போது துல்லியமாக கணக்கெடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இது போன்ற ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் மின்வாரியத்தில் ரூ. 10,000 கோடிக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இந்த மின்மீட்டர்கள் தவறுதலாய் கணக்கெடுகின்றார்கள், சில நபர்கள் 100 யூனிட் பயன்படுத்தினால் 110 யூனிட் என்று கணக்கெடுப்பு வருகின்றது எனவே பழுதடைந்த மின் மீட்டர்களை அரசு செலவில் மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதற்காக கட்டணம் மிகவும் வசூலிக்கக்கூடாது எனவும் இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.