சென்னை : தமிழ்நாடு முழுவதும் அடுக்கு மாடி குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின்சார கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.அதிகப்பட்சமாக 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ள மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டணம் ரூ.8.15 இருந்து ரூ.5.50 காசுகளாக குறைக்கப்படுகிறது.