சென்னை: பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்வாரியம் 2023-24ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியிருப்பதும், அதற்காக ரூ.13,179 கோடி கூடுதலாக செலவழித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதில் ஒளிந்து கிடக்கும் அனைத்து மர்மங்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக 2023-24ம் ஆண்டில் அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டது பற்றி உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.