சென்னை: பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில்வே சார்பில் பல்வேறு ரயில் நிலையங்களில் பராமாிப்பு பணி மேற்கொள்வது வழக்கம். அந்தவகையில், கடந்த 23-ம் தேதி முதல் தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட இருக்கிறது.
அதாவது சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில் சேவைகள் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 4 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம்-தாம்பரம், விழுப்புரம்-மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர்-சென்னை கடற்கரை ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.