டெல்லி: டெல்லியில் பயணிகளை ஏற்றிச் சென்ற மின்சார பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்துக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்த நிலையில் , உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் பேருந்து முழுவதும் எரிந்து தீக்கிரையானது. ஜகத்புரி பகுதியில் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த பேருந்தால், பல கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.