சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் கூறியதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லாமல் பாஜ தலைவர் ஜே.பி.நட்டா பதில் கூறுவது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததை ஆதாரத்தோடு எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தேர்தல் ஆணையம் பாஜவின் கைப்பாவையாக செயல்பட்டு வருவது இந்திய ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையத்தின் ஆதரவு, தேர்தல் பத்திர நன்கொடை குவிப்பு, அதிகார பலம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு தேர்தல் அரசியலில் பாஜ வெற்றி பெற்று வருகிறது. இவ்வாறு செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதிலளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது: செல்வப்பெருந்தகை கண்டனம்
0