புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 6 ஆண்டுக்குள் ஒரு முறை ஏதாவது ஒரு தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும். அப்படி, தேர்தலில் போட்டியிடாவிட்டால் அந்த கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும்.
இதன்படி, கடந்த 2019 முதல் இதுவரை தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.
இந்த கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் பணி தொடங்கி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.