கொழும்பு: இலங்கை தலைநகரில் கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பான ஆலோசனையில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பங்கேற்றார். அதை தொடர்ந்து அவர் நேற்று இலங்கை அதிபர் ரணில்விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குன்வர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரைச் சந்தித்தார். இலங்கை அதிபர் அலுவலகத்தில் நடந்த ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது, இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் நிலவும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இலங்கையில் செப்.21ல் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அஜித்தோவல் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.