புதுடெல்லி: தேர்தல் அரசியல் வியூகம் வகுத்து கொடுக்கும் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். பீகாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜன் சுராஜ் அமைப்பை காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி அரசியல் கட்சியாக மாற்றி அறிவிக்க உள்ளார்.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியில் பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் மற்றும் சிறுபான்மையினர் தலா 5 பேர் உள்ளனர். இந்த 25 உறுப்பினர்களும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் கட்சி தலைவரின் பதவிக்காலம் ஒரு வருடம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.