Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்திய தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து விட்டது என்பது வெட்கக்கேடான ஒன்று: முத்தரசன் கடும் கண்டனம்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து விட்டது என்பது வெட்கக்கேடான ஒன்று என்று முத்தரசன் கூறியுள்ளார். சென்னை தென்மேற்கு மாவட்டம், சென்னை மேற்கு மாவட்டம் திமுக சார்பில் சிவானந்த சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: நாடு விடுதலை பெற்ற பிறகு முதல் பொதுத்தேர்தல் 1952ம் ஆண்டு நடைபெற்றது. அதில் இருந்து கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை நாம் வாக்களித்து இருக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இப்படி ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவது இது தான் முதல் தடவை. இதற்கு முன்பு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எந்த போராட்டமும் நடைபெற்றது இல்லை.

காரணம் தேர்தல் ஆணையம் என்பது மோடியால் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு அல்ல அல்லது வேறு பிரதமர்களால் அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல. மாறாக நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி தந்திருக்கக்கூடிய ஒரு மகத்தான அமைப்பு தேர்தல் ஆணையம். அதே போல வாக்களிக்கின்ற உரிமை. வயது வந்த அனைவருக்கும் வாக்களிக்கக்கூடிய உரிமையும் வழங்கியிருப்பது நம்முடைய அரசியலமைப்பு சட்டம். இந்த தேர்தல் ஆணையத்தை நியமனம் செய்யப்படுகின்ற உறுப்பினர்களை எப்படி தேர்வு செய்வது, அதை யார் தேர்வு செய்வது என்பதற்கு உச்சநீதிமன்றம் ஒரு வழிக்காட்டுதலை செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், அதே போல எதிர்க்கட்சி தலைவர் ஆகிய 3 பேரும் தேர்தல் ஆணையம் உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று வழிக்காட்டியது.

ஆனால், மோடி அரசு தனக்கு சாதகமான முறையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தேவையில்லை. நான் இருந்து கொள்கிறேன். நான் நியமனம் செய்யும் ஒரு அமைச்சர் இருந்து கொள்வார். எதிர்க்கட்சி தலைவர், இந்த 3 பேர் கொண்ட குழுவால் பெருன்பான்மை அடிப்படையில் இறுதி செய்யப்படும். இதில் பெரும்பான்மை யாரு. மோடியும், அமித்ஷாவும் தான் பெருன்பான்மை. போனால் காப்பி, பிஸ்கட் சாப்பிட்டு விட்டு வரலாம். வேற ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து என்ன முடிவு எடுக்கிறார்களோ அது தான் தேர்தல் ஆணையம் என்று மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. அதை நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தொடர்ந்து வாக்களித்து வருகிறோம். எந்த பிரச்னையும் இல்லை. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெறுகிறது.

தேர்தல் வரும் காலத்தில் இறந்தவர்களை நீக்குவார்கள். 18 வயது நிரம்பியவர்களை விண்ணப்பம் கொடுத்து சேர்த்து கொள்வார்கள். எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால், தற்போது தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து விட்டது என்பது தான் வெட்கக்கேடான ஒன்று. நம்பகத்தன்மையை இழந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.