புதுடெல்லி: ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களின் சட்டமன்ற பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே, அம்மாநிலங்களில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மாயாவதி, “பகுஜன் சமாஜ் தனது இருப்பின் மூலம், பல மாநிலங்களில் அதிகார சமநிலையை உருவாக்கியது. நான்கு மாநிலங்களிலும், வலுவான மற்றும் முரணான திமிர் பிடித்த ஆட்சியை விட, நலிவடைந்தோர், முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக, மக்கள் நலனுக்காக உழைக்கும் கூட்டணி ஆட்சியில் இருப்பது அவசியம். எனவே, இம்மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்கு பிறகே, கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்,’’ என்று கூறினார்.