சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு பணியாற்றவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கள ஆய்வு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, வெளிப்படைத் தன்மை வாய்ந்த அறிக்கையை கட்சிக்கு உண்மையாக வழங்க வேண்டும். மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் ஆய்வு செய்து கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என கூற வேண்டும் என கூறினார். ஆலோசனையில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.