சென்னை: விஜய பிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் மாணிக்கம் தாக்கூருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மாணிக்கம் தாக்கூர் எம்.பி., தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.