கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்களில் போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகின்றன. இது தொடர்பான புகார்களில் ஆரம்பாக்கம் போலீசார் தொடர்ந்து எளாவூர் சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அவ்வழியாக வந்த சொகுசுப் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது அந்த பேருந்தில் 3 கிலோ கஞ்சாவுடன் வந்த ஒரு வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன்(27) என்பது தெரியவந்தது. அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
எளாவூர் சோதனைச்சாவடியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
51