சென்னை: எழும்பூர், வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையங்களில் கூடுதல் நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் நுழைவாயில்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது; எழும்பூர் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நுழைவுவாயில் திறக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகளுடன் கூடுதல் நுழைவுவாயில்திறக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவு வாயிலை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் திரு. கோபிநாத் மல்லையா(பராமரிப்பு மற்றும் இயக்கம்), அவர்கள் 02.12.2024 அன்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள்மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்த நுழைவுவாயில் 02.12.2024 முதல் பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.