சென்னை: சென்னை மாநகர காவல்துறை மற்றும் ஆவடி மாநகர காவல்துறை சார்பில் ‘போதையில்லா தமிழகத்துக்காக ஓடு’ என்ற பெயரில் ஆவடி இரவு மாரத்தான்-2023 போட்டி கடந்த 2ம் தேதி நடந்தது. போட்டியில் கென்யா நாட்டை சேர்ந்த வீரர்கள், ஆந்திரா, கர்நாடகாமற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 4,700 பேர் கலந்து கொண்டனர். மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் 5 கிமீ, 10 கிமீ, 21 கிமீ மாரத்தான் ஓட்டம் நடந்தது. இந்த மாரத்தான் போட்டியை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். மாரத்தானில் கலந்துகொண்ட நபர்களிடம் வசூலான ரூ.4.74 லட்சம் பணத்திற்கான காசோலையை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் குழந்தைகள் நல பாதுகாப்புக்காக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அதிகாரி வெங்கடேசன் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி கங்காதரனிடம் நேற்று வழங்கினார்.