தேவையானவை
அரிசி சாதம் – ஒரு கப்
கத்தரிக்காய் – 5 (மீடியம் சைஸ்)
வெங்காயம் – 3 (மீடியம் சைஸ்)
தனியா – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -4
பெருங்காயத்தூள் -கால் தேக்கரண்டி
நறுக்கிய மல்லித்தழை -கால் கப்
எண்ணெய், உப்பு -தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசி சாதத்தை உதிரியாக வடித்து ஆறவிடவும். வெங்காயத்தையும், கத்தரிக்காயையும் நடுத்தரமாக நறுக்கவும் (ரொம்பவும் பொடியாக நறுக்கினால் குழைந்துவிடும். சுவையும் இல்லாமல் போய்விடும்). தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், வெங்காயத்தை வதக்கி பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். அரைத்த பொடியை தூவி 2 நிமிடம் கிளறவும். பிறகு, ஆற வைத்துள்ள சாதத்தை சேர்த்து லேசாக கிளறி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.