கத்திரிக்காய் முன்று
முள்ளங்கி ஒரு துண்டு 100 கிராம்
இஞ்சி துருவியது ஒரு தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
மிளகு தூள் கால் தேக்கரண்டி
தண்ணீர் 4 டம்ளர்
செய்முறை
கத்திரிக்காய் மற்றும் முள்ளங்கியை துருவி கொண்டு ஒரு பெரிய வாயகன்ற சட்டியில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் உப்பு, சீரகம், மஞ்சள் தூள், துருவிய கத்திரிக்காய், முள்ளங்கி மற்றும் இஞ்சியை சேர்த்து மிதமான தீயில் நன்கு வேக விடவும்.ஒரு டம்ளர் வற்றும் வரை தீயின் தனலை மிதமாக வச்சி வேக விடவும் (ஸ்லோ குக்கர்). பிறகு வடிகட்டி தேவைக்கு குடிக்கவும்.