தேவையானவை:
கத்தரிக்காய்,
உருளைக்கிழங்கு,
வெங்காயம்,
பூண்டு – தலா 2,
உப்பு,
மஞ்சள் தூள்,
பெருங்காயம்,
எண்ணெய்,
மல்லித்தழை,
மீல்மேக்கர் – தேவையான அளவு.
அரைப்பதற்கு:
தேங்காய்,
ெபாட்டுக் கடலை,
பச்சை மிளகாய்,
கசகசா, முந்திரி – 5.
மசாலா பொருட்கள்
பிரிஞ்சி இலை,
பட்டை,
லவங்கம்,
ஏலக்காய்,
அன்னாசி மொட்டு,
கசகசா.
செய்முறை:
கத்தரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மசாலா பொருட்களை வதக்கி, வெங்காயம், பூண்டு, கத்தரிக்காய் வதக்கி, தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், கசகசா, முந்திரி, பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து, விழுதை சேர்த்து கொதிக்க விடவும். வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து உதிர்த்து போடவும். கொதி வந்தவுடன் மல்லித்தழை, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு இறக்கவும்.