நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் மாற்றம் செய்தார். இதன்படி, முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் 10 காசுகள் உயர்த்தி ஒரு முட்டையின் விலை ரூ.4.75 காசாக நிர்ணயம் செய்தார். நாமக்கல் மண்டலத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 25 காசுகள் முட்டை விலையில் குறைக்கப்பட்டது. அடுத்த நாள் முட்டை விலையில் 25 காசுகள் உயர்த்தப்பட்டது.
முட்டை விலை 10 காசு உயர்வு
0