நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, நேற்று மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 560 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக, முட்டை விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. கொள்முதல் விலை உயர்வதால் கடைகளில் விற்பனை விலையும் ரூ.6.60 ஆக உயர்ந்துள்ளது. கோடை வெயில் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால் விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
முட்டை விலை தொடர் உயர்வு
0