நாமக்கல்: நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் தினமும் சுமார் 5 கோடி முட்டைகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினமும் முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ₹4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.