Friday, February 23, 2024
Home » புரோட்டின் குறைவால் ஏற்படும் பாதிப்புகள்

புரோட்டின் குறைவால் ஏற்படும் பாதிப்புகள்

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

நம் உடலில் தசைகள், சருமம், ஹார்மோன், என்சைம் ஆகியவற்றிற்கு புரோட்டின் மிகவும் அவசியம். இவை நம் உடலில் பல முக்கிய வேலைகளை செய்கிறது. நம் உடலில் 20 வகை அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவற்றில் 8 அமினோ அமிலங்கள் மிக முக்கியமானவை. காரணம் இவற்றை நமது உடலால் உற்பத்தி செய்ய முடியாது. இந்த எட்டு அமிலங்களையும் நாம் உணவால் மட்டுமே பெறமுடியும். மற்ற 12 அமிலங்களையும் நமது உடலே உற்பத்தி செய்து கொண்டுவிடும். புரோட்டினில் உள்ள சிறுசிறு அணுக்கள் அமினோ அமிலத்தால் ஆனவை.
அவரவர் உடலுக்கு ஏற்ப புரோட்டீனின் தேவை மாறுபடும்.

ஒருவருடைய உயரம், பருமன் இவற்றிற்கு ஏற்ப புரோட்டின் தேவை அமையும். வயது, உடல்நிலை, வேலை ஆகியவற்றையும் பொருத்து புரோட்டின் அளவு மாறுபடலாம். உங்கள் எடை சராசரியாகவும், உடற்பயிற்சி செய்யாதவராக இருந்தால் 0.36லிருந்து 0.6 கிராம் ஒருபவுண்டிற்கு என்ற விகிதத்தில் புரோட்டின் தேவை அமையலாம். ஆண்களுக்கு 51லிருந்து 91 கிராம் புரோட்டீனும், பெண்களுக்கு 46லிருந்து 75கிராம் புரோட்டீனும் தினசரி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த தேவைக்கு குறைவாக இருக்கும்போது புரோட்டின் பற்றாக்குறை நமது உடலில் ஏற்படுகிறது. தேவையான அளவு புரோட்டின் உடலில் இல்லை என்றால் அது பல்வேறு உபாதனைகளுக்கு வழிவகுக்கிறது. புரோட்டின் பற்றாகுறையால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று பார்ப்போம்:புரோட்டின் பற்றாகுறை ஏற்பட்டவுடன் அதனை உணர்த்த நமது உடல் 13விதமான அறிகுறிகளை காட்டுகிறது.

போதிய அளவு உணவு எடுத்துக் கொண்டாலும் அதில் புரோட்டின் அளவு குறைவாக இருப்பது. இதற்கு க்வாஷிவோர்கோர் என்பார்கள். புரோட்டின் மற்றும் கலோரி குறைவான உணவுகளை எடுத்துக் கொண்டால் அதனை மரைஜ்மஸ் என்பார்கள். இவ்வாறு புரோட்டின் பற்றாக்குறையை இரண்டு வகைகளாக சொல்கின்றனர். புரோட்டின் குறைவான உணவை உட்கொண்டால் அது சரிவிகித உணவாகாது. உணவில் போதுமான கலோரிகள் இல்லை என்றே சொல்லலாம். நீங்கள் குறைந்த கலோரி கொண்ட உணவை எடுத்துக் கொண்டால் உடல் சக்தி பெறுவதற்கு புரோட்டீனை எடுத்துக் கொள்கிறது. இதனால் உங்கள் எடை குறைந்துவிடுகிறது. சிலர் உடலில் புரோட்டின் ஜீரணிக்க தேவையான எரிசக்தி இல்லை என்றாலும் எடை கூடுவதும் உண்டு.

புரோட்டின் புற்றாக்குறை ஏற்பட்டால் கேசம், சருமம் மற்றும் நகங்களை பாதிக்கும். அடர்த்தியை இழந்து நகங்கள் உடைந்து போகின்றன. சருமம் வறண்டு போகின்றன.
உடலுக்கு தேவையான புரோட்டின் கிடைக்கவில்லை என்றால் தசைகள் பலவீனமடைகின்றன. உடல், தசைகளிலிருந்து அமினோ அமிலங்களை அடைய முயற்சிப்பதால் தசை நார்கள் குறைந்துவிடுகின்றன. மெட்டபாலிக் ரேட் குறைந்துவிடுகிறது. உடலில் வலுவும், எனர்ஜியும் குறைந்து காணப்படும்.

புரோட்டின் ஜீரணமாக கார்போஹைட்ரேட்டை விட அதிக நேரம் எடுக்கும். அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி குறைகிறது. இதனால் சர்க்கரை அல்லது இனிப்பு சாப்பிட ஆசை ஏற்படுகிறது. அதனால் உணவில் புரோட்டீனும், கார்போஹைட்ரேட்டும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். உடலில் புரோட்டின் அளவு குறைந்தால் வைட்டமின்12 மற்றும் ஃபோலைட் குறைபாடு ஏற்படலாம். இதனால் ரத்தம் குறைந்து அனீமியா ஏற்படுகிறது. சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. மேலும் ரத்த கொதிப்பு குறைந்து களைப்பாக உணரும் நிலை ஏற்படும்.

புரோட்டின் குறைபாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. அடிக்கடி நோய் ஏற்படும். குணமாக அதிகநாள் தேவைப்படும். இம்யூனிட்டிசெல்கள் புரோட்டீனால் ஆனவை. ஆகையால் சரிவிகித உணவு உட்கொள்ளாவிட்டால் உடல் பாதிக்கக்கூடும்.புரோட்டின் குறைபாட்டால் பி.பி உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். உடலுக்கு சரியான சத்துணவு கிடைக்கவில்லை என்றால் எல்லா உறுப்புகளும் சரியாக செயல்பட முடியாமல் போகும்.

புரோட்டின் குறைபாடும் கல்லீரல் நோயும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. புரோட்டின் இல்லை என்றால் கல்லீரலின் டிடாக்சிஃபிகேஷன் வேலை நடக்காமல் நின்றுவிடும்.
புரோட்டின் குறைபாடு ஏற்படும்போது உடல் தன் எரிசக்திக்காக தசைகளிலிருந்து கலோரியை எடுத்துக் கொள்ளும். இதனால் தசை நார்களில் வலி, மூட்டுவலி ஆகியவை ஏற்படும். புரோட்டின் அளவு குறையும்போது உடலில் வீக்கம் ஏற்படும்.

உடலில் அதிகளவு தண்ணீர் சேர்வதால் பருமனாக உணர்வீர்கள். புரோட்டின் திசுக்களில் குறிப்பாக கால்களில், கணுக்காலில் தண்ணீர் சேராமல் தடுக்கிறது.காயங்கள் ஆறவும். புதிய தோல் உருவாகவும் புரோட்டின் அவசியம். அது குறையும்போது உடலில் எதிர்ப்பு சக்தி குறைகிறது. எனவே, தேவையான அளவு புரோட்டினும், கலோரியும் உள்ள உணவுகளை உட்கொண்டு நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.

தொகுப்பு: ரிஷி

You may also like

Leave a Comment

eleven − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi