வாஷிங்டன்: அமெரிக்க அரசின் கல்வித்துறையை ஒழித்துக்கட்ட அதிபர் டிரம்ப் முடிவுசெய்துள்ளதாக அரசு வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசின் கல்வித்துறையை முற்றாக மூடிவிடுவதென்பது டிரம்பின் நீண்டகாலத் திட்டமாகும். 2017ல் முதல்முறை அதிபரானபோது கல்வித்துறையை மூடிவிட டிரம்ப் செய்த முயற்சிக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தரவில்லை. குறைந்த வருவாய் மாகாணங்களுக்கு பல ஆயிரம் கோடி டாலரை கல்வி உதவி நிதியாக அமெரிக்க ஒன்றிய அரசு அளித்து வருகிறது. ஒரு லட்சம் பொதுப்பள்ளிகள், 34000 தனியார் பள்ளிகளை கண்காணிக்கும் பணியையும் கல்வித்துறை செய்து வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு 1,60,000 கோடி டாலர் அளவுக்கு கல்விக்கடன் வழங்கும் பணிகளையும் கவனித்து வருகிறது. எனினும் அரசின் செலவை குறைக்கும் நோக்கத்தில் கல்வித்துறையை மூடிவிட டிரம்ப் முடிவு செய்துள்ளார். கல்வித்துறையில் அரசின் தலையீட்டை நிறுத்தும் நோக்கிலும் அத்துறையை மூடிவிட டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அரசின் கல்வித்துறைக்கு மூடுவிழா – டிரம்ப் திட்டம்
0