கல்வி சேவையில் 46 ஆண்டுகளுக்கும் மேலாகவும், கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் ஜெயா கல்விக் குழுமம் செயல்பட்டு வருகிறது. இதன் அறக்கட்டளைத் தலைவர் அ.கனகராஜ், அறக்கட்டளை நிறுவனர் மற்றும் செயலர் அ.விஜயகுமாரி, துணைச் செயலாளர் மருத்துவர் க.தீனா மற்றும் துணைத் தலைவர் பொறிஞர் க.நவராஜ் ஆகியோரின் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், அக்ரி, முடநீக்கியல், மருந்தாளுநர் போன்ற துறைகளில் மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறது. மேலும் பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் இக்கல்வி குழுமத்தில் பயிலும் மாணவர்கள் பலர் முதல் நிலை தர வரிசையைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். இக்கல்வி ஆண்டில் புதிதாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சைன்ஸ் படிப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி மாணவர்களின் வளர்ச்சிக்கு இக் கல்விக் குழுமம் வழி காட்டுகிறது.