மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்குட்பட்ட கொக்கிலமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 1 முதல் 8ம் வகுப்பு வரை 250க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், மாணவர்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவை முறையாக இல்லை என கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மதில் சுவர் இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 2ம்தேதி கொக்கிலமேடு பகுதியில் கடந்த 2ம்தேதி நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், கொக்கிலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முறையான குடிநீர், கழிப்பறை வசதியில்லை எனவும், 8ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் மனு கொடுத்தார். அதன்படி, திருக்கழுக்குன்றம் உதவி தொடக்க கல்வி அலுவலர் நேற்று காலை கொக்கிலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நேரில் வந்து குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்தார்.
எடையூர் ஊராட்சியில் அரசு பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு
39