சென்னை: நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் துர்காவின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்கு துர்காவே எடுத்துக்காட்டு. நான் மீண்டும் சொல்கிறேன், கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்று கூறியுள்ளார்.