அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை நடத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்களை அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் நிறுவன செயல்பாடுகளில் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் ED சோதனை செய்தது. முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைக்காத நிலையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்ததாக கற்பனை செய்தியை ED வெளியிட்டது.