மாநிலங்களவை சீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியால் தன்னிச்சையாக செயல்பட முடியாது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவது பற்றி அமித்ஷாவை ஆலோசிக்காமல் இபிஎஸ் முடிவெடுக்க முடியாது. நகைக்கடன் புதிய நிபந்தனை விவகாரத்தில் நிர்மலா சீதாராமனை இபிஎஸ் ஏன் கண்டிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.