டெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கை நவ.29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4800 கோடி முறைகேடு செய்ததாக பழனிசாமி மீது புகார் எழுந்தது. பழனிசாமி மீதான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கக் கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.