சென்னை: தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற மனுவை எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றார். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றுக் கொண்டார். தொகுதி மேம்பாட்டு நிதியை தயாநிதி மாறன் முறையாக செலவிடவில்லை மக்களவைத் தேர்தலின்போது பழனிசாமி பிரச்சாரம் செய்தார். எடப்பாடி பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். உண்மைக்கு மாறாகவும், தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை பழனிசாமி கூறியதாக வழக்கு தொடர்ந்தார். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல; மனுவை ஏற்க கூடாது என தயாநிதி மாறன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவை திரும்ப பெறுவதாக எடப்பாடி தரப்பு தெரிவித்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்.9-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
தயாநிதிமாறன் தொடர்ந்த வழக்கு – எடப்பாடி மனு வாபஸ்
0