சென்னை: தமிழ்நாட்டில் தே.ஜ.கூட்டணியின் தலைவர் எடப்பாடிதான்; அவர் சொல்வதே இறுதி முடிவு என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 2026ல் தே.ஜ.கூட்டணி ஆட்சி அமையும்; அதில் பாஜக அங்கம் வகிக்கும் என அமித் ஷா பேட்டி அளித்த நிலையில் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். கூட்டணி குறித்த எந்த முடிவு என்றாலும் அது எடப்பாடி பழனிசாமிதான் அறிவிக்க வேண்டும். கூட்டணியின் கட்டளை தளபதி எடப்பாடி பழனிசாமிதான். அமித் ஷா எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பது எனக்கு தெரியாது. எடப்பாடி பழனிசாமி சொல்வதுதான் இறுதி தீர்ப்பு என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி சொல்வதுதான் இறுதி தீர்ப்பு: ராஜேந்திர பாலாஜி பேட்டி
0