சென்னை: மூத்த குடிமகன் என்ற முறையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு 70 வயது ஆகிவிட்டது; மூத்த குடிமகன், அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சராக இருந்தேன்; உடல்நலக் கோளாறு உள்ளதால் வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொண்டு வருகிறேன். வழக்கை தாமதப்படுத்தும் நோக்கமோ, அல்லது நீடிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்