Tuesday, April 16, 2024
Home » அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்

by Neethimaan


சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; 19.4.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில், 28.3.2024 மற்றும் 8.4.2024 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் மட்டும் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது. அதாவது மார்ச் 28ம் தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் தொகுதிக்குட்பட்ட சிவாகாசியில் உள்ள பாவடி தோப்பு திடலில் பொதுக்கூட்டம் நடைபெறும், மேலும் மதுரை ஜெயம் தியேட்டர் அருகில், பழன்ங்காந்தம் பகுதியில் நடைபெறும். ஏப்.8ம் தேதி சிவகங்கை தொகுதிக்குட்பட்ட காரைக்குடி பகுதியில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும். இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

one × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi