புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொள்ள வந்த சசிகலா சகோதரர் திவாகரன், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடந்து விடும். பாஜவிற்கும், அதிமுகவிற்கும் இடையே மோதல் போக்கு மற்றும் வார்த்தை போர் நடந்து வருகிறது. தலித் முதல்வராக வருவதற்கு தலித் எம்எல்ஏக்களே எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சபாநாயகராக இருந்த தனபாலை முதலமைச்சராக ஆக்கலாம் என்று நான் சசிகலாவிடம் கூறி முன்மொழிந்தேன். அப்போது, அதை திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் 35 தலித் எம்எல்ஏக்கள் அதற்கு ஒத்துவரவில்லை, எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ் செய்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அவர் என்னை விட சீனியர். அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளடக்கிய அதிமுக ஒருங்கிணைப்பு தான் நடக்கும். எந்த அதிமுக தலைவரும், நிர்வாகியோ என்னிடம் தொடர்பில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடிக்கு பதில் தனபால்தான் சாய்ஸ் அதிமுகவில் தலித்தை முதல்வராக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்: திவாகரன் பேட்டி
previous post