நெல்லை: நெல்லை மாவட்ட பாஜ அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எங்கள் தே.ஜ. கூட்டணியில் மதவாதம் என்பதே கிடையாது. ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வர முடியாது.
தமிழ்நாட்டில் வரும் சட்டசபை தேர்தலில் இபிஎஸ் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆட்சி அமையும். இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள். இந்து என்பது ஒரு பண்பாடு, கலாசாரம் சார்ந்ததாகும். இந்து என்ற மதம் இல்லை. மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் 4 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதில் கட்சிப் பாகுபாடு இன்றி எல்லோரும் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து, ெநல்லை தொகுதியிலிருந்து நாங்குநேரி தொகுதிக்கு இடம் மாறுவதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தகவல் பரவுகிறதே என்ற நயினாரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே ‘அது குறித்து பிறகு பார்க்கலாம்.’’ என்றார்.
எடப்பாடி தலைமையில் கூட்டணி கட்சிகள் ஆட்சி: நயினார் உறுதி
0