சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சட்டைநாத சுவாமி கோயிலில் நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணைப் பொதுசெயலாளருமான நடிகை கவுதமி நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தவெக தேர்தல் பிரசார பிரிவு மேலாண்மை துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா எடப்பாடிபற்றி பேசிய வார்த்தைகளும், பேசிய விதமும் பல விதத்தில் தவறு.
எடப்பாடி பற்றி விமர்சிக்க ஆதவ் அர்ஜூனாவுக்கு தகுதி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கூட்டணி குறித்து எடப்பாடி சரியான நேரத்தில் சரியாக முடிவெடுப்பார் என நடிகை கவுதமி கூறினார் . வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு, இதற்கும் அதே பதிலை தெரிவித்தார்.