சென்னை: அண்ணா பெயரில் கட்சி, உருவம் கொடி. ஆனால் அண்ணா கொள்கையான மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சியை குழிதோண்டி புதைக்க முற்படுகிறார் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி என்று திமுக வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் குற்றம்சாட்டினார். சென்னை கொரட்டூரில் மாநகர கவுன்சிலர் நாகவல்லி பிரபாகரன் தலைமையில் 15 கருணை இல்லங்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை அறநிலையத்துறை அமைச்சர் முன்னிலையில் கனிம வளம் மற்றும் நீதிமன்ற, சிறை துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மேயர் பிரியா, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், 7வது மண்டலக்குழு தலைவர் மூர்த்தி, வட்ட செயலாளர்கள் சீனிவாசன், கமல் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் பேசியதாவது: அண்ணா பெயரில் கட்சி, கொடி. ஆனால், அண்ணாவின் உயிர் கொள்கையான மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை காற்றில் பறக்க விட்டு விட்டனர் எடப்பாடி கூட்டத்தினர்.
பாஜ கூட்டணி ஆட்சி என அமித்ஷாவும், எடப்பாடிதான் தலைமை, ஆனால் என்.டி.ஏ. ஆட்சி என நயினார் நாகேந்திரனும் கூறுகின்றனர். ஒருவேளை 2026க்கு பிறகு அதிமுக, பாஜவிலேயே கரைந்து இனைந்துவிடுமா? புரியவில்லை. கூட்டணி என்றால் தமிழ்நாட்டுக்கு மட்டும் தானா, இந்தியா அளவில் இல்லையா? மத்தியில் கூட்டாட்சி இல்லையா? பலருக்கு துரோகம் செய்த அதிமுக எடப்பாடி, சமீபகால துரோகமாக ஒப்பந்த பக்கங்களில் எழுதி கையெழுத்திட்டதை கூட தூக்கி எறிந்து விட்டு பிரேமலதாவுக்கு துரோகம் செய்துவிட்டார். ஆனால் திமுக 2024 தேர்தலில் பேசியபடி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்துவிட்டது. ஏன் 1996ல் ஒரே நேரத்தில் ராஜ்யசபா சீட் காலியானது. அந்த 4 ஐயும் அப்படியே த.மா.கா.வுக்கு வழங்கியவர் கலைஞர்.
த.வெ.க. தலைவர் விஜய்க்கும் அவர் அப்பாவுக்கும் தகராறு, குமரி அனந்தனின் காங்கிரசிலிருந்து விலகி நேர் எதிரியான பா.ஜ.வில் சேர்ந்து தந்தையை, சிறிய தந்தையை எதிர்த்தவர் தமிழிசை சவுந்தராஜன், அவரது மகன் தமிழிசையுடன் விமான நிலையம் சென்றபோது பாஜ ஒழிக என்று கூச்சலிட்டார். பா.ம.க.வில் இப்போது மகன் அடிக்கடி மாற்றி பேசுவார், தலைமை தாங்கிட தகுதி இல்லாதவர் அன்புமணி என ராமதாசும், 5 லட்சம் 3 லட்சம் என பதவி கூப்பாடு போட்டு பதவியை விற்பதாக ராமதாசை அவர் மகன் அன்புமணியும் கூறுகிறார்கள். சட்டத்திற்கு ஆதரவாக வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினர் என வக்பு போர்டுக்கு திருத்தம் வந்த போது அதை எதிர்க்காத அன்புமணியை அன்று ராமதாஸ் கண்டித்திருந்தால் இன்று நாம் அவரின் புலம்பலை காது கொடுத்து கேட்டிருக்கலாம்.
ராமதாஸ் அ.தி.மு.க.வை விரும்புகிறார். அன்புமணி பா.ஜ.வை விரும்புகிறார். ஆனால் இப்போது பா.ஜ.வும் அ.தி.மு.க.வும் இணைந்த சூழலில் பிரச்னை ஏது? அன்புமணிக்கு கொடுத்ததை திருப்பி கேட்கலாமா என்கின்றனர் சிலர். ஏன் திருப்பி கேட்க கூடாது. மராட்டிய முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, பின்பு துணை முதல்வராக மாற்றப்படவில்லையா? முகுந்தனால் இளைஞர் அணி பதவியில் தான் சண்டை என்றனர்.
ஆனால் இப்போது முகுந்தனுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை அவர் ஒதுங்கிவிட்டார் என்கிறார் ராமதாஸ். முகுந்தனும் ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிட்டார். ஆக எங்கே பிரச்னை என்றால் 2026ல் தலைவரிடம் தான் பெட்டி கொடுப்பார் என்பதால் பெட்டி யார் வாங்குவது என்பது தான் பெரிய கூட்டணியிடமிருந்து தேர்தல் செலவிற்காக யார் வாங்குவது என்பதுதான். இவர்களின் செயல்களை நாம் பார்க்கும் போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பாதம் தொட்டு நாம் வணங்க வேண்டும் போல தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.