சென்னை: எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தை மோதல் போராக வெடித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;
எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியதில் பின்வாங்க மாட்டேன்: அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியதில் இருந்து பின்வாங்க மாட்டேன். எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனத்தை திரும்ப பெற மாட்டேன். நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரியானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா?: அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவில் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தலையில் டை அடித்துக் கொண்டால் இளைஞர்கள் ஆகிவிடுவார்களா? என்றும், 70 வயது எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 35 வயதுக்கு மேல் பாஜக இளைஞர் அணியில் பொறுப்பு கொடுப்பதில்லை. பிற கட்சிகளில் 50 வயதை தாண்டியவர்களும் இளைஞர் அணியில் பொறுப்பில் உள்ளனர். மக்களிடம் பேசுவதிலும் செயலிலும்தான் இருக்கிறது இளமை, டை அடிப்பதில் கிடையாது. அரசியலில் அனுபவத்தை முன்னிலைப்படுத்த வேண்டியதில்லை. எடப்பாடி பழனிசாமி பதவியை விட்டு விலகினால் பக்கத்து வீட்டுக்காரரே அவரை மதிக்க மாட்டார் என அண்ணாமலை கூறினார்.