சென்னை: அதிமுகவின் வரலாறு தெரியாமல் மன அழுத்ததால் அண்ணாமலை பேசி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அண்ணாமலைக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்ற பழமொழிக்கு ஏற்ப அண்ணாமலை செயல்படுவதாகவும், பதவி வெறியால் என்ன பேசுகிறோம் என்பதை தெரியாமல் அண்ணாமலை பேசி வருவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், மனநலம் பிறழ்ந்து பேசி வருவதாகவும் அண்ணாமலையை ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.